சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை கொண்டு செல்லும் வேன்களை வழிமறித்து பல இடங்களில் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அப்படியான ஒரு சம்பவத்தின் பின்னணியில் உருவாகி உள்ள படம் 'ரூல் நம்பர் 4'. பாஸர் இயக்கியுள்ள இந்த படத்தில் ஏகே பிரதீஸ் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ஸ்ரீகோபிகா கதாநாயகியாக நடிக்கிறார். மோகன் வைத்யா, ஜீவா ரவி, கலா கல்யாணி, பிர்லா போஸ், கலா பிரதீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். கெவின் டெகாஸ்டா பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்ய, தீரஜ் சுகுமாறன் பின்னணி இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் பாஸர் கூறும்போது “ஏடிஎம் வேன் டிரைவராக பணிபுரிகிற கதாநாயகன் தமிழுக்கு, ஏடிஎம் செக்யூரிட்டியின் மகள் மீது காதல். ஒருநாள் ஏடிஎம் வேனை கொள்ளையடிக்க ஒரு தரப்பினர் திட்டமிடுகிறார்கள். இதற்காக காதலியும் கர்ப்பிணி பெண் ஒருவரும் கடத்தப்படுகிறார்கள். அப்படியான சூழ்நிலையில் கதாநாயகன் எப்படி செயல்படுகிறான், அதற்கான பலன் என்ன என்பதுதான் படம். வருகிற 3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.