சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு |

நடிகரும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் ‛ரெபல்'. மமிதா பைஜூ, கருணாஸ், சுப்பிரமணிய சிவா, ஷாலு ரஹீம், வெங்கிடேஷ் வி.பி, ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். உண்மை சம்பவங்களை தழுவி அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகி உள்ள இதை அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ் இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து, தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் முதல்பார்வையை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். அதில் ஜிவி பிரகாஷ் கையில் பெட்ரோல் குண்டை எறிவது போன்றும், பின்னணியில் கலவரக் காட்சிகளாகவும் உள்ளது.
படம் பற்றி இயக்குநர் கூறுகையில், ''1980களில் நடைபெற்ற சில உண்மை சம்பவத்தை தழுவி இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. கல்லூரி மாணவர்களுக்கான அரசியலும் இதில் பேசப்பட்டிருக்கிறது. ஜி.வி.பிரகாஷின் திரையுலக பயணத்தில் இந்தப்படம் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தும்,'' என்றார்.




