பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் | அண்ணன் கடனை என்னால் அடைக்க முடியாது: கோர்டில் நடிகர் பிரபு தகவல் | பிளாஷ்பேக்: சமகாலத்தில் எடுக்கப்பட்டு சாதனையையும், வேதனையையும் சந்தித்த இரண்டு “ஞானசௌந்தரி”கள் | 'ரெட்ரோ' டப்பிங் பணிகளை நிறைவு செய்த சூர்யா |
2024ம் ஆண்டிலும் வாராவாரம் நான்கைந்து தமிழ்ப் படங்களாவது வந்துவிடுகிறது. ஒரு படமாவது ஓடி விடாதா, வசூலையும், லாபத்தையும் தந்துவிடாதா என தியேட்டர்காரர்கள் ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மலையாளப் படமான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படம்தான் அந்த ஏக்கத்தைத் தீர்த்து வைத்துக் கொண்டிருக்கிறது.
கடந்த வாரம் வெளியான புதிய படங்களின் சத்தம் ஓரிரு காட்சிகளுக்குக் கூட கேட்கவில்லை. இந்த வாரம் சொல்லிக் கொள்ளும்படியான நான்கைந்து படங்களாவது வருமா என்பது சந்தேகமாகவே உள்ளது. இதுவரை வெளியான அறிவிப்புகளின்படி 'ரெபல், சிட்டு' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாக உள்ளது.
'ரெபல்' படத்தில் ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடிக்க, 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜு கதாநாயகியாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கியுள்ள இப்படம் இந்த வாரம் மார்ச் 22ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்குப் போட்டியாக சொல்லிக் கொள்ளும்படி எந்தப் படமும் இல்லை.
கேரளா பின்னணியில் நடக்கும் அரசியல், மலையாளிகள், தமிழர்கள் பிரச்னைகள் என இப்படம் உருவாகி உள்ளது. டிரைலர் வெளியாகி இன்னும் 10 லட்சம் பார்வைகளைக் கூடக் கடக்காமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது. இருப்பினும் படம் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.