கோவாவில் தெருவோர கடைக்காரரிடம் சண்டை போட்ட ‛ஜெயிலர்' வில்லன் | பிளாஷ்பேக்: நடிப்பில் சாதித்து, தயாரிப்பு, இயக்கத்தில் சரிவை சந்தித்த 'நடிகையர் திலகம்' சாவித்திரி | இந்த விஷயம் இருந்தால் மட்டும் கதை சொல்லுங்க : மிஸ் யூ இயக்குனரிடம் ஜிப்ரான் போட்ட கண்டிஷன் | நடிகர் தர்ஷனுக்கு ஆபரேஷன் செய்வதில் தாமதம் : ஜாமீனை நீட்டிக்கும் முயற்சியா? | ரஜினி இதையெல்லாம் விட்டுடலாமே : ஜானகி அம்மாவிடம் வருத்தப்பட்ட எம்ஜிஆர் | புஷ்பா 2 சர்ச்சை : வெளிப்படையாகப் பேசிய தேவி ஸ்ரீ பிரசாத் | அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் 'லியோ'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 148 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று இரண்டாவது வாரத்தைத் தொட்டுள்ள நிலையில் அதன்பின் எந்த வசூல் அறிவிப்பையும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடவில்லை.
இதனிடையே, ஒரு வாரத்தில் இப்படம் 500 கோடி வசூலைக் கடந்துள்ளதாகச் சொல்கிறார்கள். அதே சமயம் நேற்று பல ஊர்களில் பகல் காட்சிகள் கூட்டம் வராத காரணத்தால் ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் படம் என்றாலே தமிழகத்தைத் தவிர கேரளாவில்தான் அதிக வசூலைப் பெறும் ஆனால், இப்போது ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களிலும் இப்படம் அதிக வசூலைக் கொடுத்துள்ளது. கேரளாவில் 45 கோடி, கர்நாடகாவில் 31 கோடி, ஆந்திரா, தெலங்கானாவில் 38 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வந்துள்ளது. அவற்றின் மூலம் மட்டுமே 114 கோடி வசூலைக் குவித்துள்ளது.
இதன் மூலம் தென்னிந்திய அளவில் ஸ்டார் ஆக உயர்ந்திருக்கிறார் விஜய். அவருடைய கடந்த சில படங்கள்தான் தெலுங்கில் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்று வருகிறது. தற்போது 'லியோ' மூலம் அதிக வசூல் கிடைத்துள்ளது. தென்னிந்திய மாநிலங்களில் 'லியோ' படம் லாபக் கணக்கை ஆரம்பித்து வைத்து விட்டது.