2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் விநாயகன். வில்லன் மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்து வருகிறார். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். 'கம்மட்டிபாடம்' என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான கேரள அரசின் விருதையும் பெற்றுள்ளார். 'ஜெயிலர்' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்ததன் மூலம் இங்கு புகழ் பெற்றார். 'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமிற்கு வில்லனாக நடித்துள்ளார்.
விநாயகன் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவார். குறிப்பாக அவர் மீது ஏகப்பட்ட அடிதடி வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது குடிபோதையில் போலீஸ் நிலையத்திலேயே கலாட்டா செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்.
எர்ணாகுளம் அருகே உள்ள கலூரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த விநாயகன் குடியிருப்பு வாசிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து எர்ணாகுளம் வடக்கு போலீசிற்கு குடியிருப்புவாசிகள் தகவல் கொடுத்தனர்.
போலீசார், விநாயகனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கும் அவர் தகராறில் ஈடுபட்டார். இதை தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிந்த போலீசார் அவரை கைது செய்து மருத்துவ பரிசோதனை செய்து, அவர் மது அருந்தியதை உறுதி செய்தனர். இன்று அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு பின்னர் அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.