23 வருடங்களுக்கு பிறகு பிரசாந்த் - ஹரி கூட்டணி -அதிகாரப்பூர்வ அறிவிப்பு | விஜய்யின் ‛லியோ' பட சாதனையை முறியடித்த அஜித்தின் ‛குட் பேட் அக்லி' டிரைலர்! | பொன்ராம் இயக்கத்தில் சண்முக பாண்டியன் நடிக்கும் ‛கொம்பு சீவி' | சத்யராஜ் பாணியில் கதை தேடும் ‛மர்மர்' நாயகன் தேவ்ராஜ்! | தமிழகத்திற்காக மற்ற மாநிலங்களிலும் ‛குட் பேட் அக்லி' படத்தின் அதிகாலை காட்சி ரத்து! | ரோமியோக்களால் மொபைல் நம்பரை மாற்றிய நடிகை | விரும்பிய கல்லூரியில் சேர குத்துச்சண்டை பழகிய பிரேமலு ஹீரோ | புஷ்பா 2 சம்பவம் எதிரொலி ; ஆர்யா-2 ரீ ரிலீஸான தியேட்டர்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு | சன்னி தியோலை நேரில் சந்தித்த பிரபாஸ்: ‛ஜாட்' படத்திற்கு வாழ்த்து | பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை நோட்டீஸ் ; எம்புரான் படம் காரணம் அல்ல |
தலைப்பில் உள்ள 'புத்தம் புது காப்பி' என்பதில் 'காப்பி' என்பது இருக்கிறதா இல்லையா என்பது இப்போது தெரியாது. ஆனால், சில சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் ரிலீஸ் செய்யும் போது அந்தக் காலங்களில் புது பிரிண்ட் போட்டு 'புத்தம் புது காப்பி' என்று ரிலீஸ் செய்வார்கள். அப்படி, குறித்த இடைவேளையில் எம்ஜிஆர் நடித்த 'உலகம் சுற்றும் வாலிபன்' படம்தான் இப்படி 'புத்தம் புது காப்பி' என அதிக முறை ரிலீஸ் ஆன படம்.
இந்த 'துருவ நட்சத்திரம்' படம் ஆரம்பித்து சில பல வருடங்கள் ஆகியிருந்தாலும் டிரைலரில் அந்த பழைய விஷயங்கள் என எதுவுமில்லாமல் புத்தம் புது காப்பி ஆக இருப்பது ஆச்சரியமாக உள்ளது. கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் மொபைல் போன்களை வைத்து வேண்டுமானால் எந்த வருடங்களில் படமானது என கண்டுபிடிக்கலாம்.
தீவிரவாதத்தை அடக்க உருவாக்கப்படும் ஒரு 'பேஸ்மென்ட்' குழு, அதில் இடம் பெறும் 11 பேர் என்ன சாகசங்களைச் செய்கிறார்கள் என்பதுதான் இப்படத்தின் கதையாக இருக்கும் என டிரைலரைப் பார்த்து யூகிக்க முடிகிறது.
அந்த 11 பேரில் விக்ரம், பார்த்திபன், ரித்து வர்மா, ராதிகா, சிம்ரன், திவ்ய தர்ஷினி, முன்னா சைமன், வம்சி கிருஷ்ணா, மாயா உள்ளிட்டவர்கள் இருக்கலாம் எனத் தெரிகிறது. முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தைக் கொடுக்கத் தயாராகியிருக்கிறார் கவுதம் மேனன்.
விக்ரம் தோற்றமும், ஸ்டைலும் அசத்தலாக உள்ளது. 'ஜெயிலர்' படத்தில் பார்த்த விநாயகன் தானா இது என ஆச்சரியப்பட வைக்கிறார். டிரைலரில் மற்ற கதாபாத்திரங்களுக்கு இடம் கொடுக்கவில்லை. கடைசியில் கவுதம் மேனன் வந்து நீண்ட வசனம் பேசி முடித்து வைக்கிறார். சொல்லப் போனால் கதாநாயகன் விக்ரம் கூட டிரைலரில் அவ்வளவு பேசவில்லை. இருப்பினும் கடைசியில் அவர் பேசியுள்ள அந்த கெட்ட வார்த்தை சர்ச்சையை ஆரம்பித்து வைக்கலாம்.
'துருவ நட்சத்திரம்' எப்படியோ ஆரம்பித்து, டிராப் ஆகி, மீண்டும் உருப் பெற்று, ஒரு வழியாக விரைவில் ஒளிரத் தயாராகிவிட்டது. அனைத்து துருவத்திலிருந்தும் ரசிகர்களை ஈர்க்குமா என்பது ஒரு மாதத்தில் தெரிந்து விடும்.