மே 9ல் ரிலீஸ் ஆகும் திலீப்பின் 150வது படம் | ஓடிடி.,க்கு அதிக விலைக்கு போன டாப் தமிழ் படங்கள் | 20 ஆண்டுகளாக தோழிகளாக வலம்வரும் திரிஷா - சார்மி! | 'குபேரா' படத்தின் புதிய அப்டேட்! | அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! |
விஜய் நடித்து கடந்த வாரம் வெளிவந்த படம் 'லியோ'. இப்படம் தெலுங்கிலும் டப்பிங் ஆகி வெளியானது. அதே நாளில் பாலகிருஷ்ணா நடித்த 'பகவந்த் கேசரி' படமும், மறுநாள் ரவி தேஜா நடித்த 'டைகர் நாகேஸ்வரராவ்' படமும் தெலுங்கில் வெளியாகின. அந்த இரண்டு நேரடித் தெலுங்குப் படங்களுக்கு முன்பாகவே 'லியோ' படம் வசூலில் லாபத்தைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டது.
தெலுங்கில் முதல் நாளில் 16 கோடி, இரண்டாவது நாளில் 24 கோடி, மூன்றாவது நாளில் 32 கோடி என மொத்த வசூலையும் படத்தை வெளியிட்ட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நான்காவது நாளில் தொகையைச் சொல்லாமல் “பாக்ஸ் ஆபீஸ் வசூலை மாற்றி எழுதுகிறது,” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார்கள்.
தெலுங்கில் சுமார் 16 கோடிக்கு விற்கப்பட்ட 'லியோ' படத்தின் நிகர வசூல் 18 கோடியைத் தாண்டி லாபக் கணக்கை ஆரம்பித்துவிட்டது. கடந்த ஐந்து நாட்களில் 35 கோடி வரை வசூலாகியுள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள். விஜய்யின் முந்தைய படங்களின் வசூலை தெலுங்கில் இப்படம் முறியடித்துள்ளது. அது போலவே மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் அதிக வசூலைக் குவித்துள்ளது என்றும் தெரிவிக்கிறார்கள்.