துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
'லியோ' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் 68வது படத்தின் அப்டேட்டை நேற்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுவிட்டது. படத்தில் நடிப்பவர்கள், மற்ற கலைஞர்கள் என அனைவரைப் பற்றியும் தெரிவித்துவிட்டார்கள்.
இந்த ஆண்டில் விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய இரண்டு படங்களும் ஒரே நாளில்தான் வெளிவந்தன. அதற்குள் விஜய் நடித்த அடுத்த படமான 'லியோ' படம் வெளிவந்துவிட்டது. அதற்கடுத்த படத்தின் படப்பிடிப்பிற்கும் அவர் போய்விட்டார். ஆனால், அஜித் இப்போதுதான் 'விடாமுயற்சி' படத்திற்குப் போயிருக்கிறார்.
நேற்று விஜய் 68 பூஜை வீடியோ வெளிவந்த பின் அஜித் ரசிகர்களும் 'விடாமுயற்சி' படத்தின் பூஜை வீடியோவை வெளியிடுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்கள். பொதுவாக தனது எந்த ஒரு படத்தின் பூஜையிலும் அஜித் கலந்து கொள்வதில்லை. இருப்பினும் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடந்து வரும் படப்பிடிப்பின் முதல் நாள் வீடியோ சிலவற்றையாவது தயாரிப்பு நிறுவனம் வெளியிடுமா என அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.