''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
விஜய் நடிப்பில் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள படம். இப்படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினமும் 5 காட்சிகள் நடத்திக் கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. முதலில் வெளியிட்ட ஆணையில் எத்தனை மணிக்கு முதல் காட்சியை ஆரம்பிக்கலாம், எத்தனை மணிக்கு முடிக்கலாம் என்பது குறித்து எதுவும் சொல்லவில்லை.
இதனால், சில தியேட்டர்களில் காலை 8 மணி காட்சிக்கே முதல் காட்சியை நடத்துவதாக முன்பதிவை ஆரம்பித்தனர். இந்நிலையில் நேற்று அரசு தரப்பில் மீண்டும் புதிய ஆணை ஒன்றை வெளியிட்டார்கள். அதன்படி காலை 9 மணிக்கு ஆரம்பித்து நள்ளிரவில் 1.30 மணிக்குள் அந்த 5 காட்சிகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்கள். இவற்றை மீறுகிறார்களா என்பது குறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தியிருந்தார்கள்.
நேற்று மாலை வெளியான அந்த ஆணையைத் தொடர்ந்து ஆன்லைன் முன்பதிவு இணையதளங்களில் காலை காட்சி 9 மணிக்கு என்பதை உடனடியாக மாற்றினார்கள். இருப்பினும் கோவை உள்ளிட்ட நகரங்களில் உள்ள சில தியேட்டர்களில் இன்னும் காலை காட்சி 8 மணி என்பதை மாற்றாமல் இருக்கிறார்கள். அத்தியேட்டர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது தெரியவில்லை.