2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவராஜ்குமார். கடந்த 25 வருடங்களாக கன்னடத்தில் மட்டுமே நடித்து வந்த இவர் சமீபகாலமாக தமிழில் கவனம் செலுத்தி படங்களில் நடித்து வருகிறார். அதிலும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கிய வேடத்தில் சிறப்பு தோற்றத்தில் இவர் நடித்த ஜெயிலர் திரைப்படம், இவருக்கு கர்நாடகாவையும் தாண்டி மிகப்பெரிய அளவில் வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுக் கொடுத்துள்ளது. வரும் அக்டோபர் 19ஆம் தேதி கன்னடத்தில் சிவராஜ் குமார் நடித்துள்ள கோஸ்ட் திரைப்படம் வெளியாக இருக்கிறது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜெயிலர் படம் மூலம் தனக்கு கிடைத்த வரவேற்பு பற்றி அவர் கூறும்போது, ‛‛பத்து நிமிடங்கள் மட்டுமே வந்து போகும் ஒரு படத்தின் மூலம் இந்த அளவிற்கு ரசிகர்களின் வரவேற்பு பெற முடியுமா, இத்தனை படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளேன். ஆனாலும் இப்போது தமிழ்நாடு, ஆந்திரா, வெளிநாடு என எங்கு சென்றாலும் ஜெயிலர் ஜெயிலர்.. நரசிம்மா.. என்று ரசிகர்கள் அன்புடன் அழைக்கிறார்கள். போட்டி போட்டுக் கொண்டு வெளிநாடுகளிலும் என்னுடன் செல்பி எடுக்கிறார்கள். என் மனைவி கூட எட்டு நிமிட காட்சிகளில் நடித்ததற்கு இப்படிப்பட்ட ஒரு வரவேற்பா என ஆச்சரியப்பட்டு பேசுகிறார். குறிப்பாக விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கிளைமாக்சில் என்ட்ரி கொடுத்த சூர்யாவுக்கு கிடைத்த வரவேற்புக்கு இணையாக எனக்கும் கிடைத்திருக்கிறது" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.