'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர், கவுண்டமணி, செந்தில் மற்றும் பலர் நடிப்பில் 1996ல் வெளிவந்த படம் 'இந்தியன்'. அப்படத்தின் இரண்டாம் பாகம் கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்க 2019ம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பமானது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு படம் முடியும் நிலைக்கு வந்துள்ளது.
இப்படத்திற்கான டப்பிங்கை கமல்ஹாசன் பேச ஆரம்பித்துள்ளார் என நேற்று வீடியோவுடன் கூடிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். கமல்ஹாசன் ரசிகர்கள் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாகவே இப்படம் எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். படத்தின் கதாநாயகன் டப்பிங் பேச ஆரம்பித்துவிட்டால் அந்தப் படம் ஏறக்குறை வெளியீட்டிற்கத் தயாராகிவிட்டது என்றுதான் அர்த்தம். இதற்குப் பிறகு பின்னணி இசை, இதர வேலைகள் நடந்தால் படம் முடிந்துவிடும். அடுத்த நான்கைந்து மாதங்களுக்கு அந்த வேலைகள் நடக்கலாம்.
எனவே, 2024 கோடை விடுமுறையில் 'இந்தியன் 2' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.