காதலர் தினத்தில் காஷ்மீரில் ஹோட்டல் திறக்கும் கங்கனா | உலக அளவில் முதலிடம் பிடித்த அல்லு அர்ஜுனின் புஷ்பா- 2! | டிஆர்பி-யில் சிரஞ்சீவி, பிரபாஸை பின்தள்ளிய சிவகார்த்திகேயன்! | தெலுங்கில் மந்தமான வசூலில் அஜித்தின் விடாமுயற்சி! | சிப்பாய் விக்ரம் இல்லாமல் அமரன் வெற்றி முழுமை பெறாது! - ராஜ்குமார் பெரியசாமி | இளையராஜா பயோபிக் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | ஜூலை மாதம் மீண்டும் வருகிறது டைனோசர் | உயர்ந்த சினிமாவின் ஒரு பகுதியாக இருப்பேன் : சஞ்சனா நடராஜன் | எனது உற்சாகத்திற்கு காரணம் கிரியா யோகா : ரஜினி | 'விடாமுயற்சி' படம் பார்த்த அனிருத்துக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் |
தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் கடைசியாக நடித்து வெளிவந்த படங்கள் தமிழ் சினிமாவில் வசூல் சாதனையைக் குவித்தவை.
கமல்ஹாசன் நடித்து கடந்த வருடம் வெளியான 'விக்ரம்' படம் 400 கோடி வசூலையும், ரஜினிகாந்த் நடித்து இரண்டு மாதங்கள் முன்பு வெளியான 'ஜெயிலர்' படம் 600 கோடி வசூலையும் பெற்றன.
'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு தனது மகள் ஐஸ்வர்யா இயக்கும் 'லால் சலாம்' படத்தில் நடித்து முடித்துள்ளார் ரஜினிகாந்த். அடுத்து த.செ.ஞானவேல் இயக்கத்தில் தனது 170வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 171வது படத்தில் நடிக்கப் போகிறார். ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்தடுத்த படங்களையும் முடிவு செய்து விடுகிறார் ரஜினிகாந்த்.
அதுபோலவே கமல்ஹாசனும் செய்துவிடுகிறார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. ஷங்கர் இயக்கத்தில் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன். இதற்கடுத்து வினோத் இயக்கத்தில் தனது 233வது படத்தில் நடிக்கப் போகிறார். அது முடிந்த பின் மணிரத்னம் இயக்கத்தில் 234வது படத்தை ஆரம்பிக்கப் போகிறார்.
அஜித் தற்போது 'விடாமுயற்சி' படத்திலும், விஜய் அவருடைய 68வது படத்திலும் நடித்து வருகிறார்கள். இதற்கடுத்து அவர்கள் எந்தெந்த படங்களில் நடிக்கப் போகிறார்கள் என்பதை இப்போது முடிவு செய்ய மாட்டார்கள். நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் மட்டுமே முடிவு செய்வார்கள்.
ஆனால், ரஜினி, கமல் இருவருமே அடுத்தடுத்து படங்களை முன்கூட்டியே முடிவு செய்துவிடுகிறார்கள்.