சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

8வது படிக்கும் மாணவி அகஸ்தி எழுதி இயக்கும் படம் 'குண்டான் சட்டி'. 2டி அனிமேஷன் படமாக இது உருவாகி வருகிறது. அகஸ்தியின் தந்தை கார்த்திகேயன் தயாரிக்கிறார். எம்.எஸ்.அமர்கித் இசை அமைக்கிறார். வசனம், பாடல்களை அரங்கன் சின்னத்தம்பி எழுதியிருக்கிறார். படத்தின் பணிகள் இறுதிகட்டத்தில் இருக்கிறது. தற்போது பின்னணி இசை கோர்ப்பு பணியில் இருக்கும் அகஸ்தி படம் பற்றி கூறியிருப்பதாவது:
இந்தக் கதையை 6 நாட்களில் எழுதினேன். 8 மாதத்தில் படத்தை உருவாக்கினேன். சினிமா மாதிரியே பாடல், சண்டை எல்லாம் இருக்கும். கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான விஷயங்கள், குறும்புத்தனங்கள் போன்றவற்றைக் கொண்டு மாணவர்கள் பள்ளிக்கூடத்திலும், வீட்டில் பெற்றோர்களிடத்திலும் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும். எப்படி படித்து முன்னேற வேண்டும் என்று இயல்பாகவும் நேர்த்தியாகவும் சொல்லி இருக்கேன்.
குண்டேஸ்வரன், சட்டிஸ்வரன் இருவரும் சகோதர்கள். அவர்களின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதால் கேலிக்கு உள்ளாகிறார்கள். இதனால் தங்களது வித்தியாசமான தோற்றத்தை கொண்டே எல்லோரையும் ஏமாற்றுகிறார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் மாட்டிக் கொள்ள அவர்கள் தங்கள் புத்திசாலிதனத்தால் தப்பித்தார்களா என்பதுதான் கதை. என்றார்.




