மம்முட்டி பட இயக்குனருக்கு வெற்றியை தருவாரா சவுபின் சாஹிர் ? | 10 நாள் அவகாசத்துடன் மீண்டும் ஆரம்பமான கன்னட பிக்பாஸ் 12 | விஜய்க்கு பவன் கல்யாண் ஆலோசனை சொன்னாரா? | ஏஆர் முருகதாஸை வறுத்தெடுத்த சல்மான் கான் | காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? |
நடைபெற இருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் மலையாள படமான 2018 , இந்திய அரசின் சார்பில் விருது போட்டியில் பங்கேற்கிறது. இப்படத்தில் டொவினோ தாமஸ், தன்வி ராம், லால், நரேன், ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி, அஜய் வர்கீஸ், உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மலையாளத்தில் எடுக்கப்பட்ட இந்த படம், பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், போன்ற தென்னிந்திய மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. 2018ல் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பின் பின்னணியில் இந்த படம் உருவாகி இருந்தது.
தற்போது தனது 170வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக திருவனந்தபுரத்தில் தங்கி இருக்கிறார் ரஜினி. அவர் 2018 படத்தின் இயக்குனர் மற்றும் படக்குழுவினரை வரவழைத்து நேரில் சந்தித்து, அவர்கள் ஆஸ்கர் விருதை வென்று வர வாழ்த்தி இருக்கிறார். இந்த சந்திப்பு தொடர்பாக படத்தின் இயக்குனர் ஜுட் ஆண்டனி தனது சமூக வலைத்தள பக்கத்தில் "தலைவர் “என்ன படம் ஜூட், எப்படி எடுத்தீர்கள்? அற்புதம். போய் ஆஸ்கார் கொண்டு வாருங்கள், என் ஆசிகள் மற்றும் பிரார்த்தனைகள் எப்போதும் இருக்கும் என்று வாழ்த்தினார். இந்த மறக்க முடியாத அனுபவத்திற்கு கடவுளுக்கு நன்றி. அன்புத் தோழி சவுந்தர்யாவிற்கும் நன்றி” என்று எழுதியுள்ளார்.