'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
இசையமைப்பாளர் தமன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக இசையமைத்து வருகிறார். தெலுங்கில் 'அலா வைகுந்தபுரம்லோ' படத்திற்குப் பிறகு அவர் அதிகப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். அந்தப் படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட்டானதே அதற்கு ஒரு காரணம்.
2021ல் பொயப்பட்டி சீனு இயக்கத்தில் தமன் இசையமைக்க பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த படம் 'அகாண்டா'. அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றது. சமீபத்தில் அந்தப் படம் குறித்து பொயப்பட்டி சீனு, ஒரு பேட்டியில் பேசும் போது ‛தமனின் பின்னணி இசை இல்லை என்றாலும் அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கும்' எனக் கூறியிருந்தார். அப்படத்தில் தமனின் பின்னணி இசை காட்சிகளை இன்னும் அதிரடியாகக் காட்டியது என்பதுதான் ரசிகர்களின் கருத்து. பொயப்பட்டி சொன்ன கருத்துக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இந்நிலையில் இசையமைப்பாளர் தமன் எக்ஸ் சமூக வலைதளத்தில், 'எனக்குக் கவலையில்லை' என ஒரே வரியில் பதிவிட்டுள்ளார். பொயப்பட்டி சீனுவின் பேட்டிக்கான பதிலடி தான் அது என ரசிகர்கள் எடுத்துக் கொண்டுள்ளார்கள்.
பொயப்பட்டி இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த 'ஸ்கந்தா' படத்திற்கு தமன் தான் இசை. பாலகிருஷ்ணா நடித்து அக்டோபர் 19ல் வெளிவர உள்ள 'பகவந்த் கேசரி' படத்திற்கும் தமன் தான் இசையமைத்துள்ளார்.