செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
பாய்ஸ் படத்தில் டைரக்டர் ஷங்கர் அறிமுகம் செய்த 5 பாய்ஸ்களில் 4 பேர் சினிமாவில் பேசப்படும் நடிகர்களாகி விட்டனர். சித்தார்த், பரத், நகுல், இசையமைப்பாளர் தமன். இவர்களில் நகுல் காதலில் விழுந்தேன் படத்தில் நடித்தபோது பரபரப்பாக பேசப்பட்டவர். அந்த படத்தில் இவர் ஆட்டம்போட்ட நாக்குமுக்க என்ற பாடல் இளசுகளின எனர்ஜிடிக் டானிக்காக அமைந்தது. ஆனால் அதன்பிறகு நகுல் நடித்த சில படங்கள் தோல்வி அடைந்ததால், பின்னர் அவர் நடித்து வந்த படங்களும் ஆமை வேகத்தில் வளர்ந்து வந்தன. அப்படி இரண்டு ஆண்டுகளாக நகுல் நடித்து வந்த வல்லினம், நான் ராஜாவாகப்போகிறேன் ஆகிய இரண்டு படங்களும் தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளன.
இந்த படங்கள் என்னை மறுபடியும் பரபரப்பான, எனர்ஜிடிக்கான நடிகனாக்கும் என்று கூறி வரும் நகுல், நாக்கு முக்க பாடல் எனது சினிமா கேரியரில் முக்கியமான பாடல். அந்த பாடல்தான் என்னை பட்டிதொட்டியெல்லாம் கொண்டு சென்றது. அந்த வகையில, இன்றைய சினிமாவில் நடிப்புக்கு இணையாக பாடல்களின் ஹிட்டும் நடிகர்களுக்கு பெரிய பலமாக உள்ளது. மேலும், என்னை ஆரம்பத்திலேயே அதிரடி ஆட்டக்கார நடிகனாக பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து அந்த மாதிரியாகவே எதிர்பார்க்கிறார்கள். அதனால் அடுத்தபடியாக நான் நடிக்கும் படங்களில் நாக்கு முக்க மாதிரியான பாடல்கள் இடம்பெறும் வகையில் கதைகளை தேர்வு செய்வேன் என்கிறார்.
இப்படி சொல்லும் நகுல், வல்லினம் படத்தில் நகுலா நகுலா என்றொரு பாடலை நான் பாடியிருக்கிறேன். அதில் என்னுடன் ஆண்ட்ரியாவும் இணைந்து பாடியுள்ளார். இனி என் குரலுக்கு பொருத்தமான டியூன்கள் கிடைத்தால் தொடர்ந்து பின்னணியும் பாடுவேன் என்கிறார்.