சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், கவுதம் மேனன், மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‛லியோ'. அதிரடி ஆக் ஷன் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. ஏற்கனவே ‛நா ரெடி, படாஸ்...' என்ற இரு பாடல்கள் வெளியாகி உள்ளன. அனிருத் இசையமைத்துள்ளார். முன்னதாக இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடப்பதாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளை காரணம் காட்டி விழாவை ரத்து செய்துவிட்டனர். இதனால் உள் அரங்கில் சுருக்கமாக 100 - 200 பேரை வைத்து விழாவை நடத்த திட்டமிட்டுள்ளனர். அக்., 19ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் படத்தின் டிரைலர் குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளனர். அதன்படி வரும் அக்., 5ல் டிரைலர் வெளியாகும் என புதிய போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.




