‛கண்ணகி' படத்தின் டிரைலர் வெளியானது | இன்னும் ஒரு மாதம் காத்திருங்கள் - ஏ.ஆர்.முருகதாஸ் | கமல் உடன் இணைந்து நடிக்கும் கவுதம் கார்த்திக் | மீண்டும் அஜர்பைஜானுக்கு சென்ற விடாமுயற்சி படக்குழு | 3 படம் ரீ ரிலீஸ் குறித்து நெகிழ்ந்த தனுஷ் | பொங்கல் ரேஸிலிருந்து ஒதுங்கிய விஜய் தேவரகொண்டா படம் | யார் செத்தாலும் இந்த சண்டை சாகாது : கவனம் ஈர்க்கும் பைட் கிளப் டீசர் | ட்ரெயின் படத்தில் நடிக்கும் வெற்றிமாறன் | கமலின் ஆளவந்தான் ரீ-ரிலீஸ் : புதிய டிரைலர் வெளியானது | ஸ்ரேயா போட்டோ ஷுட்டுக்கு உதவி செய்த மகள் |
பிரியா பவானி சங்கரைப் போன்று சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்தவர் திவ்யா துரைசாமி. சூர்யா நடிப்பில் பாண்டியராஜ் இயக்கிய எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் இவர் அறிமுகமானார். அந்த முதல் படத்திலேயே திவ்யா துரைசாமியின் நடிப்பு சூர்யா உள்ளிட்ட பலரது பாராட்டுகளைப் பெற்றது. அதை அடுத்து சுசீந்திரன் இயக்கிய குற்றம் குற்றமே என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்த திவ்யா, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்திருந்தார்.
இந்த நிலையில் தற்போது மாமன்னன் படத்தையடுத்து மாரி செல்வராஜ் இயக்கி உள்ள வாழை படத்தில் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார் திவ்யா துரைசாமி. இந்த படத்தில் ஒரு மாறுபட்ட உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தும் வேடத்தில் நடித்திருப்பதாக கூறும் திவ்யா துரைசாமி, இந்த வாழை படம் தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு திருப்புமுனை படமாக அமையும் என்று கூறி வருகிறார். சோசியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருந்து வரும் திவ்யா துரைசாமி, தற்போது தனது இடை அழகை வெளிப்படுத்தும் ஒரு கிளாமர் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அந்த படங்கள் வைரலாகின.