ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இயைமைப்பில், விஜய் நடிக்கும் அவரது 68வது படத்தின் பூஜை இன்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டார்கள்.
இப்படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தில் விஜய் நடிப்பது பற்றி மட்டுமே இதுவரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மற்ற நடிகர்கள், நடிகைகள் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. படத்தில் நடிக்கும் ஒரு சில நடிகர்கள் மட்டும் இன்றைய பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள்.
மீடியாக்களுக்கு அனுமதி அளிக்காமல் நடத்தப்பட்ட இந்த பூஜை குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஆகியவற்றை படக்குழு இப்போதைக்கு வெளியிடப் போவதில்லையாம். விஜய் நடித்துள்ள 'லியோ' படம் வெளிவந்த பிறகே வெளியிட உள்ளார்களாம். சரவஸ்வதி பூஜை அல்லது விஜயதசமியன்று அவற்றை வெளியிட உள்ளதாகத் தெரிகிறது. அத்துடன் படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது வீடியோ ஏதாவது வெளியாகவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.