சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவான படம் 'சித்தா'. இப்படம் வெற்றி பெற வேண்டி படக்குழுவினர் பழனிக்கு சென்றனர். அவர்களுடன் சித்தார்த்தும் பழனி செல்வதற்காக, கோவை விமான நிலையம் வந்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது, ''சித்தா திரைப்படம். இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படமாக வரும் என்ற நம்பிக்கை உள்ளது. உண்மை சம்பவங்களை வைத்து, இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. சித்தப்பா மற்றும் ஒரு பெண் குழந்தைக்கு, இடையிலான உறவை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படத்தில் குழந்தைகள் கடத்தல் குறித்தும் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.
இரு நாட்களுக்கு முன், 'சித்தா' திரைப்பட 'புரமோஷன்' நிகழ்ச்சிக்காக, கர்நாடகா சென்றிருந்தார் சித்தார்த். நிகழ்ச்சியின் நடுவே புகுந்த கன்னட அமைப்பினர், தமிழகத்துக்கு கர்நாடகா காவிரி தண்ணீர் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலாட்டா செய்ததும், நிகழ்ச்சியின் பாதியில் நடிகர் சித்தார்த் வெளியேறியதும் குறிப்பிடத்தக்கது.