'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
ஆர்.பி.பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.பாலா தயாரிக்கும் படம் 'கொலைச்சேவல்'. வி.ஆர்.துதிவாணன் இயக்குகிறார். இந்த படத்தில் கலையரசன், தீபா பாலு நாயகன் நாயகியாக நடிக்கிறார்கள். இவர்களுடன் பால சரவணன், வெங்கட், கஜராஜ், ஆதவன் உள்பட பலர் நடிக்கிறார்கள். பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், சாந்தன் இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் துதிவாணன் கூறும்போது “இது ஒரு மிகவும் அழகான காதல் கதை. அனைவரும் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ளது. அதே சமயம் சமுதாயத்திற்கு தேவையான மிக முக்கியமான கருத்து ஒன்றையும் இப்படம் சொல்லும். குறிப்பாக திரைப்படத்தின் கடைசி 20 நிமிடங்கள் மிகவும் பரபரப்பாக இதுவரை கண்டிராத வகையில் இருக்கும். கலையரசனுக்கு ஒரு திருப்பு முனையாக இந்த திரைப்படம் அமையும். படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன. மிக விரைவில் திரையரங்குகளில் வெளியாகும்" என்றார்.