சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
தென்மேற்கு பருவக்காற்று, மாமனிதன், கூடல் நகர், தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் சீனு ராமசாமி. தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் 'இடிமுழக்கம்' என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் அவர் நடிகர் ஆகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் தங்கராஜ் தயாரிக்கிறார். சி.வி.குமார் உதவியாளர் விஜய் கார்த்திக் இயக்குகிறார். இப்படத்தின் இளம் நாயகனாக அருண் நடிக்க, அவரது ஜோடியாக நிரஞ்சனா நடிக்கிறார். இவர்களுடன் யுடியூப் புகழ் விஜய் டியூக், ஷிமோர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் நடிக்கின்றனர். ஏ.எஸ்.சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார், எஸ்.ஆர்.ஹரி இசை அமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விஜய் கார்த்திக் கூறும்போது “புதிய சமுதாய மாற்றத்திற்கான வழிகாட்டியாக இப்படம் அமையும். பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் நிற்பதே சமூகநீதி என்ற கருத்தை ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் பதிவு செய்யும். சென்னை விழுப்புரம், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த படத்தில் இயக்குனர் சீனு ராமசாமியை நடிகராக அறிமுகப்படுத்துதில் மகிழ்ச்சி. அவர் படம் முழுக்க வருகிற ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்” என்றார்.