காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
இயக்குனர் அட்லி - நடிகை பிரியா ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர்களுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். ஷாருக்கான் நடிப்பில் தான் இயக்கி உள்ள ஜவான் படம் திரைக்கு வந்த அன்று, தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டார் அட்லி. இந்த நிலையில், தற்போது இயக்குனர் அட்லியின் மனைவியான பிரியா, அட்லியின் சினிமா பயணம் குறித்து ஒரு நெகிழ்ச்சியான பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நண்பராக காதலனாக கணவனாக தந்தையாக இப்போது நான் பார்ப்பது ஒரு அற்புதமான பயணம். உங்களைப் போன்ற ஒரு கடினமான உழைப்பாளியை இதுவரை நான் பார்த்ததில்லை. உண்மையான உழைப்பு அர்ப்பணிப்புதான் உங்களை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளது. உங்களது பயணத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமை அடைகிறேன். எப்போதும் நானும், நம் மகனும் உங்கள் பக்கத்திலேயே இருப்போம். உங்களது கைகளை பிடித்துக் கொண்டே உற்சாகப்படுத்துவோம். இன்னும் நீங்கள் மகத்தான உயரத்தில் வளர வாழ்த்துக்கள் என்று அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார் பிரியா அட்லி.