ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சினிமா ரசிகர்கள் அதிகம் பார்க்கும் சமூக வலைத்தளங்களில் இன்ஸ்டாகிராம் தளம் முக்கிய இடத்தில் உள்ளது. பல நடிகைகள் அந்தத் தளத்தில்தான் ஆக்டிவ்வாக இருப்பார்கள். அவர்களது விதவிதமான புகைப்படங்களைப் பகிர்வது, அடிக்கடி அப்டேட் கொடுப்பது, ஸ்டோரியில் எதையாவது வைப்பது என ரசிகர்களைக் கவர்ந்து கொண்டே இருப்பார்கள்.
நடிகர்களை விடவும் நடிகைகள் இன்ஸ்டா தளத்தில் அதிக பாலோயர்களைப் பெற்றுள்ளார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் நடித்து வரும் சமந்தா தற்போது இன்ஸ்டா தளத்தில் 30 மில்லியன் பாலோயர்களைக் கடந்துள்ளார். திருமணம் முடிந்து விவாகாரத்தான பின்னும் அவருக்கான ரசிகர்கள் குறையாவில்லை, அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள் என்பதையே இது காட்டுகிறது.
இன்ஸ்டா தளத்தில் 39 மில்லியன் பாலோயர்களுடன் தென்னிந்திய நடிகைகளில் முதலிடத்தில் உள்ளார் ராஷ்மிகா மந்தனா. இரண்டாவது இடத்தில் உள்ள சமந்தாவை அடுத்து காஜல் அகர்வால் 26 மில்லியன்கள், பூஜா ஹெக்டே 24 மில்லியன்கள், ஸ்ருதிஹாசன் 24 மில்லியன்கள், தமன்னா 23 மில்லியன்கள் என டாப்பில் இருக்கிறார்கள்.
இன்ஸ்டா தளத்தில், தென்னிந்திய அளவில் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் அல்லு அர்ஜுன். அவர் 22 மில்லியன் பாலோயர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்து விஜய் தேவரகொன்டா 19 மில்லியன்களுடன் இண்டாவது இடத்தில் இருக்கிறார்.