அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
பி.வாசு இயக்கத்தில், வித்யாசாகர் இசையமைப்பில், ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு மற்றும் பலர் நடித்து 2005ல் வெளிவந்த படம் 'சந்திரமுகி'. மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளிவந்த 'மணிச்சித்திரத்தாழ்' என்ற படத்தை 12 வருடங்களுக்குப் பிறகு ரீமேக் செய்து 2004ல் கன்னடத்தில் 'ஆப்தமித்ரா' என்ற பெயரில் வெளியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார்கள். அப்படத்தை அப்படியே தமிழில் 'சந்திரமுகி' என ரீமேக் செய்தார்கள்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு 'சந்திரமுகி 2' படத்தை இந்த வாரம் வெளியிட உள்ளார்கள். ஆனால், முதல் பாகத்தில் நடித்த வடிவேலு தவிர அப்படத்தில் நடித்த யாரும் இரண்டாம் பாகத்தில் நடிக்கவில்லை. இரண்டாம் பாகத்தின் முடிவில் 'சந்திரமுகி 3' படத்திற்கான தொடர்பு ஒன்றையும் வைத்துள்ளாராம் இயக்குனர் பி.வாசு.
இந்த 'சந்திரமுகி 2' எதிர்பார்த்தபடி வெற்றி பெற்று வசூலைக் குவித்தால் 3ம் பாகம் உருவாக வாய்ப்புள்ளது. முதல் பாகத்தில் நடித்த ரஜினி நடிப்பாரா அல்லது இரண்டாம் பாகத்தில் நடித்த ராகவா லாரன்ஸ் நடிப்பாரா என்பது அதற்கான கதை முழுவதுமாகத் தயாரான பின்தான் தெரிய வரும்.