கார் விபத்தில் சிக்கிய ஜி.பி.முத்து : வருத்தத்தில் வெளியிட்ட வீடியோ | 17 ஆண்டுகளுக்கு பிறகு ஓடிடியில் வெளியாகும் சுஹாசினி படம் | முனியாண்டியின் முனி பாய்ச்சல் | ஊழலுக்கு எதிராக நிஜ வாழ்க்கையிலும் நிற்க முன்வர வேண்டும் : விஷால் | விஜயகாந்த் உடல்நிலை சீராக இல்லை : மருத்துவமனை அறிக்கை | வருத்தம் தெரிவிக்கிறேன் : பேட்டியில் ஆரம்பித்து அறிக்கையில் முடித்து வைத்த ஞானவேல்ராஜா | த்ரிஷாவிடம் மன்னிப்பு கேட்கவில்லை : மன்சூர் அலிகான் அடித்த அந்தர் பல்டி | நானி படத்திற்காக ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து பாடிய துருவ் விக்ரம் | 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து முழு கணக்கு விவரம்… | 'சலார்' கதை பற்றி சொன்ன இயக்குனர் பிரசாந்த் நீல் |
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கிய மாரி செல்வராஜ். தற்போது வாழை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை அவர் இயக்கப் போகிறார். இயக்குனர் பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தின் டெக்னீசியன் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாக உள்ளது.
துருவ் விக்ரமின் பிறந்தநாளையொட்டி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்துள்ள துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்திற்காக பல மாதங்களாக கபடி விளையாட்டு பயிற்சி எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.