எமர்ஜென்சி படத்திற்கு பஞ்சாபில் தடை : கங்கனா கோபம் | 'விடாமுயற்சி' ரீமேக் உரிமை சிக்கலுக்குத் தீர்வு | ஷங்கருக்கு ஆதரவாகப் பேசினாரா தமன்? | ரசிகர்கள் கல் எறிய மாட்டார்கள் என நம்புகிறேன் : விஷால் | விரைவில் திரைக்கு வரும் தினேஷின் கருப்பு பல்சர் | விஜயகாந்த் படத்தின் தலைப்பில் நடிக்கிறாரா தனுஷ்? | சமரச பேச்சுவார்த்தை - ரவி மோகன், ஆர்த்தியின் விவாகரத்து வழக்கு தள்ளிவைப்பு | ரஜினியின் ஜெயிலர் 2 அறிமுக டீசரின் மேக்கிங் வீடியோ வெளியானது | இயக்குனர், தயாரிப்பாளர் ஜெயமுருகன் காலமானார் | விவசாயத்தின் முக்கியத்துவம் பேசும் 'மருதம்' |
பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமிமேனன், மகிமா நம்பியார் உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சந்திரமுகி-2. வருகிற 28ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் புதிய டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் வீட்டு பெண் கங்கா, சந்திரமுகியாக தன்னை நினைத்துக் கொண்டால். ஆனால் இப்போது ஒரிஜினல் சந்திரமுகியே வந்துவிட்டாள் என்ற வடிவேலுவின் குரலுடன் இந்த டிரைலர் தொடங்குகிறது. முக்கியமாக இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ள வேட்டையன் மற்றும் சந்திரமுகி ஆகிய இருவரும் ஆவேசமாக வாள் சண்டை போடும் காட்சி இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. ஆஸ்கர் விருது பெற்ற கீரவாணி இசை அமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது.