'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
மலையாள நடிகர்களான துல்கர் சல்மான், பஹத் பாசிலை தொடர்ந்து அடுத்தடுத்து இளம் நடிகர்கள் சிலர் தமிழ் சினிமா பக்கம் தங்களது கவனத்தை திருப்பி உள்ளனர். அந்த வகையில் நடிகர் உன்னி முகுந்தனும் தற்போது நேரடி தமிழ்ப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். கடந்த 10 வருடங்களுக்கு முன்பே தனுஷ் உடன் இணைந்து சீடன் என்கிற படத்தில் இவர் நடித்திருந்தாலும் அதன்பிறகு மலையாள திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்திய இவர் அவ்வப்போது தெலுங்கில் மட்டும் நடித்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த வருடம் அவர் மலையாளத்தில் நடித்த மாளிகைப்புரம் மற்றும் தெலுங்கில் நடித்த யசோதா ஆகிய படங்கள் தமிழில் வெளியாகி அவருக்கு இங்கே இன்னும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து எதிர்நீச்சல், கொடி ஆகிய படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் உன்னி முகுந்தன்.
இந்த படத்தில் இவருடன் நடிகர் சசிகுமாரும் இன்னொரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தற்போது கும்பகோணம் பகுதியில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் சூரி, சசிகுமார் ஆகியோரின் முன்னிலையில் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார் உன்னி முகுந்தன்.