சர்தார் 2 படப்பிடிப்பில் இணைந்த நடிகைகள் | டிசம்பர் மாதத்தில் புறநானூறு பட படப்பிடிப்பு? | சுந்தர்.சி இயக்கத்தில் ரவி தேஜா? | தேசிய விருது பெற்ற மணிரத்னம், ஏஆர் ரஹ்மான், நித்யா மேனன் : ஜனாதிபதி வழங்கி கவுரவிப்பு | 'விவாரியம்' ஹாலிவுட் படத்தின் ரீமேக் 'பிளாக்' ? | இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஓடிடியில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண வீடியோ | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆர் நாற்காலியின் 4வது கால் | லிப்லாக் முத்த காட்சியில் நடிக்க ஒளிப்பதிவாளர் தான் காரணம் : இனியா | பிளாஷ்பேக் : நடிகராக தோற்று இயக்குனராக ஜெயித்த பி.ஆர்.பந்துலு | விவாகரத்து வழக்கில் ஆஜராகவில்லை : தனுஷ் - ஐஸ்வர்யா மீண்டும் இணைகிறார்களா? |
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இரண்டாவதாக உருவாகி வரும் படம் லியோ. வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மொழிக்கு ஒன்றாக வெளியிடப்பட்டு வருகின்றன. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்திற்காக வெளியிடப்பட்ட ஹிந்தி போஸ்டரில் விஜய்யும் சஞ்சய் தத்தும் ஒருவருடன் ஒருவர் ஆக்ரோஷமாக மோதிக்கொள்வது போன்று புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஆனால் இந்த போஸ்டரில் விஜய்யின் ஆக்ரோஷமான முகம் குறித்து சோசியல் மீடியாக்களில் பலர் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர். இதனால் கோபமான விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பதிலடி கொடுக்க ஆரம்பித்தனர்.
இந்த விஷயத்தில் ஒரு சில ரசிகர்கள் ட்விட்டர் ஸ்பேஸ் பக்கத்தில் உரையாடிய போது எப்படியோ மோகன்லாலின் பெயரையும் இதில் இழுத்து அவரை உருவ கேலி செய்ததுடன் அநாகரிகமான வார்த்தைகளாலும் அர்ச்சித்துள்ளனர். ரசிகர்கள் பேசிய இந்த ஆடியோ அதே ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. இதைத் தொடர்ந்து கேரளாவில் உள்ள மோகன்லாலின் ரசிகர்கள் மட்டுமல்லாது மோகன்லால் தங்களது மாநிலத்தின் பெருமை என கருதும் பலரும் விஜய் ரசிகர்களுக்கு தங்களது பதிலடியை கொடுக்கும் விதமாக 'பாய்காட் லியோ' என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்ய ஆரம்பித்தனர். சில இடங்களில் லியோ படத்தின் போஸ்டர்களையும் அவர்கள் கிழித்து எறிந்தனர்.
நடிகர் விஜய்க்கு கேரளாவிலும் மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களின் அளவிற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் லியோ படம் வெளியாக இருக்கும் இந்த சமயத்தில் இங்குள்ள சில விஜய் ரசிகர்களின் பொறுப்பற்ற பேச்சு காரணமாக மோகன்லால் ரசிகர்களின் பகையை தேவையில்லாமல் உருவாக்கி விட்டார்களே என லியோ படக்குழு கொஞ்சம் பதட்டத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய்யும் அவரது ரசிகர் மன்ற தலைவரான புஸ்ஸி ஆனந்தும் ரசிகர்களின் பேச்சுக்களை கட்டுப்படுத்த வேண்டும் என்கிற கோரிக்கையும் சோசியல் மீடியாவில் எழுந்துள்ளது.