நடிகைகள் உடன் தனுஷ் பார்ட்டி : போட்டோ வைரல் | ‛கூலி' படத்தின் வெளிநாட்டு உரிமை புதிய சாதனை | மனதை கொள்ளையடிக்கும் மலரே... தினமே... : யாதும் அறியான் முதல் பாடல் வெளியீடு | புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தில் அவருடன் த்ரிஷா, சஞ்சய் தத் , அர்ஜூன், மிஷ்கின், கவுதம் மேனன் என பல பிரபலங்கள் நடித்துள்ள நிலையில், ஹாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் என்பவரும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவர் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய டெனண்ட் என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர். அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், லியோ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை கூறியுள்ளார்.
அதில், ‛‛லியோ நான் நடித்துள்ள முதல் தமிழ் படம். இந்த படத்தின் படப்பிடிப்பில் மூன்று நாட்கள் கலந்து கொண்டேன். மூன்று நாட்களும் நான் நடித்த அனைத்து காட்சிகளும் விஜய்யோடு தான் படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் ஒரு அற்புதமான மனிதர். அவரது அர்ப்பணிப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. விஜய்யுடன் நான் நடித்தது ஒரு சிறந்த அனுபவமாகவும் இருந்தது. அதேபோல் இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஒவ்வொரு காட்சிகளையும் மிகத் தெளிவாக படமாக்குகிறார். அவரது திட்டமிடல் மிகச் சிறப்பாக இருந்தது. மேலும், விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்பினேசனில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கிறீர்களா? என்று எனது மேனேஜர் என்னிடம் கேட்டபோது, மறு பரிசீலினை இன்றி ஓகே சொல்லி நடித்தேன் என்று கூறியிருக்கிறார் டென்சில் ஸ்மித்.