25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
அருண் வசீகரன் இயக்கத்தில் த்ரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள படம் ‛தி ரோடு'. சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் புகழ் சபீர், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மதுரை அருகே உள்ள சாலையில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து மர்மமான முறையில் விபத்துக்கள் ஏற்பட்டு பல உயிர் பலிகள் ஏற்படுகின்றன. இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பதை கண்டுபிடிக்கும் பெண் அதிகாரியாக த்ரிஷா புலனாய்வு களத்தில் இறங்குகிறார். அவருக்கு துணையாக மியா ஜார்ஜ் மற்றும் எம்எஸ் பாஸ்கர் ஆகியோரும் இறங்குகிறார்கள். அதில் அவருக்கு விடை கிடைத்ததா இல்லையா என்பதே படத்தின் கதை என டிரைலரை பார்க்கும்போதே புரிந்து கொள்ள முடிகிறது.
டிரைலரில் திரிஷா மட்டுமே இந்த கதையில் பிரதானமாக இருப்பது தெரிகிறது. குறிப்பாக, ‛எங்கேயோ பிறந்து எங்கேயோ வளர்ந்து இங்க வந்து உயிரை விட்டுறாங்க...' என்ற வசனம் டிரைலரில் ஓங்கி ஒலிக்கிறது. சஸ்பென்ஸ் கலந்த திரில்லாக உருவாகி உள்ள இந்த வரும் அக்., 6ல் திரைக்கு வருகிறது.