போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பார்லிமென்ட் கட்டிடம் இந்தியாவின் புதிய அடையாளமாகி இருக்கிறது. சுமார் 862 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டடம் தற்போது புதிய சுற்றுலாத்தலமாக மாறி உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள் இதை பார்த்து வருகிறார்கள்.
புதிய பார்லிமென்ட்டில் நடந்த முதல் கூட்டத்தில் முதல் மசோதாவாக பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியிருக்கிறது. இதனால் பெண்களுக்கு புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அரசும் பல்வேறு பெண்களின் அமைப்புகளை அழைத்து பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றிக் காட்டி வருகிறது. முன்னணி நடிகைகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது.
அந்த வகையில் நேற்று நடிகைகள் குஷ்பு, தமன்னா, லட்சுமி மஞ்சு, மெஹ்ரின், திவ்யா தத்தா உள்ளிட்ட நடிகைகள் புதிய பார்லிமென்ட் கட்டடத்தை சுற்றி பார்த்தனர். அதோடு பெண்கள் மசோதா தொடர்பாக நடந்த விவாதங்களையும் பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து கேட்டனர்.
இதுகுறித்து தமன்னா கூறும்போது “இது ஒரு விழிப்புணர்வாக இருக்கும் என நான் நினைக்கிறேன். பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா, சாமானியர்களைக்கூட அரசியலுக்கு வர ஊக்குவிக்கும்” என்றார்.