'ஆச்சர்யங்கள்' படத்தின் மூலம் அறிமுகமானவர் தமன் குமார். அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டரை இரண்டாம் பாகம், தொட்டால் தொடரும், சேது பூமி, 6 அத்யாயம், நேத்ரா, கண்மணி பாப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அதன்பிறகு சரியான சினிமா வாய்ப்பு கிடைக்காமல் சின்னத்திரை பக்கம் வந்தார். வானத்தைபோல, அபியும் நானும், பூவே உனக்காக தொடர்களில் நடித்தார். தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி சினிமாவில் கவனம் செலுத்துகிறார்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்ற 'அயோத்தி' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது அவர் மீண்டும் கதையின் நாயகனாக நடித்து வரும் படம் 'பூங்கா நகரம்'. இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் உதவியாளராக பணியாற்றிய ஈ.கே.முருகன் இயக்குனராக அறிமுகமாகும் படம்.
திருவண்ணாமலையை கதைக்களமாக கொண்டு சஸ்பென்ஸ் கலந்த காமெடி கலந்த ஹாரர் த்ரில்லராக உருவாகும் இந்த படத்தை அக்க்ஷயா மூவி மேக்கர்ஸ் சார்பில் நடராஜ் தயாரிக்கிறார். தமன்குமார் ஜோடியாக ஸ்வேதா டோரத்தி நடிக்கிறார். பாண்டியன் குப்பன் ஒளிப்பதிவு செய்கிறார். ஹமரா இசை அமைக்கிறார்.