ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் உருவான சட்டம் ஒரு இருட்டறை 2ம் பாகத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தமன் குமார். சில பல படங்களில் நடித்து விட்டு தற்போது வானத்தை போல சீரியலில் நடித்து வருகிறார். எல்லோரும் சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு போகும்போது தமன்குமார் மட்டும் சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்திருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தாலும் நடிப்பின் மீது இருந்த தீராத ஆர்வம் காரணமாக வேலையை உதறிவிட்டு, தியேட்டர் லேப் ஜெயராமிடம் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தேன்.. அந்த சமயத்தில் சட்டம் ஒரு இருட்டறை ஆடிசனில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததும், அதில் ஹீரோவாக நான் செலக்ட் ஆனதும் எல்லாம் அடுத்தடுத்து நடந்தன.
அதன்பிறகு தொட்டால் தொடரும், படித்துறை, நேத்ரா என சில படங்களில் நடித்துவிட்டேன்.. ஆனால் தற்போதுதான் எனது இன்னிங்ஸ் உண்மையிலேயே ஆரம்பித்துள்ளதாக உணர்கிறேன். ஒருபக்கம் சினிமாவில் கண்மணி பாப்பா, யாழி ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். இன்னொரு பக்கம் வானத்தை போல தொடரில் நடித்து வருகிறேன்.
சினிமாவில் நடித்ததை விட இப்போது அதிக மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறேன். வானத்தை போல தொடரில் நான் நடித்து வரும் சின்ராசு கேரக்டரை கொண்டாடுகிறார்கள். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சீரியலுக்கான நடிப்பு சற்றே வித்தியாசமானது தான் என்றால்லும் நான் பெற்ற நடிப்பு பயிற்சியின் மூலம் சினிமாவிற்கான அதே இயல்பான நடிப்பையே சீரியலிலும் தர முயற்சிக்கிறேன். சினிமா, சின்னத்திரை இரண்டிலும் இணைந்து பயணிக்க தீர்மானித்திருக்கிறேன். இரண்டுமே இப்போது எனக்கு இரு கண்கள் மாதிரி. என்கிறார் தமன்குமார்.