ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தரின் மருமகள் கீதா கைலாசம். மர்மதேசம், ரமணி வெசஸ் ரமணி உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த கீதா கைலாசம் தன் நடிப்பு வாழ்க்கையை நாடகத்தில் இருந்து தொடங்கினார். இந்திரா பார்த்தசாரதி எழுதிய சாரதா டீச்சர் நாவலை மேடை நாடகமாக்கி அதில் சாராதா டீச்சராக நடித்தார். அதன்பிறகு 20க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்தார்.
கைலாசத்தின் மறைவுக்கு பிறகு சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார். கட்டில் என்ற படத்தின் மூலம் அறிமுமாகி இருக்கிறார். இந்த படம் வெளிவரும் முன்பே பா.ரஞ்சித் இயக்கும் சர்பேட்டா பரம்பரை, நடிகர் அரவிந்த்சாமி இயக்கும் படம், பெப்பின் ஜார்ஜ் இயக்கும் படம் , ஒரு புதுமுகம் இயக்கும் படம் என தற்போது 5 படங்களில் நடித்து வருகிறார். சினிமாவில் நடித்தாலும் சின்னத்திரை, மற்றும் நாடகங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.