அஜித், ஆதிக் இணையும் படம் : இந்த மாதம் அறிவிப்பு? | மீண்டும் இணைந்த எஸ்.எம்.எஸ் கூட்டணி : சரி, படத்துல சந்தானம் இருக்கிறாரா? | மலையாளத்தில் கல்யாணிக்கு நடந்தது : திரிஷா, நயன்தாராவுக்கு நடக்கலை | பார்த்திபன் இயக்கும் படத்தில் ‛லப்பர் பந்து' ஹீரோயின் | காஞ்சனா 4 படத்தில் ராஷ்மிகா மந்தனா? | ரஜினி - கமலை இணைத்து படம் இயக்க ஆசைப்படும் கே.எஸ்.ரவிக்குமார் | என்னை பிரபலப்படுத்தாதீங்க... : அஜித் பேச்சு | சினிமாவில் பாலகிருஷ்ணா 50 : வாழ்த்திய ரஜினி | சமோசா மீது எனக்கு தனி லவ் : தமன்னா | ஜெயிலர் 2 பற்றி ஓவராக பேசி ஹைப் ஏற்ற விரும்பவில்லை : நெல்சன் |
தமன்னா, ஜி.எம்.குமார், பசுபதி, விவேக் பிரசன்னா, அருள் தாஸ், நந்தினி உள்பட பலர் நடிப்பில் உருவாகி உள்ள வெப் சீரிஸ் நவம்பர் ஸ்டோரி. இந்திரா சுப்ரமணியன் இயக்கி உள்ளார். 7 எபிசோட்களாக உருவாகி இந்த வெச் சீரிசுக்கு விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண் ராகவன் இசை அமைத்துள்ளார்.
டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகி இருக்கும் இந்த வெப் சீரிஸ் விஜய் தொலைக்காட்சியில் நாளை (வெள்ளி) இரவு 10 மணிக்கு ஒளிப்பரப்பாகிறது. தமிழில் ஒரு வெப் சீரிஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவது இதுவே முதல் முறை.
தமன்னாவின் அப்பா பிரபல க்ரைம் நாவல் எழுத்தாளர். அவருக்கு அல்ஸைமரால் என்ற ஞாபக மறதி நோய் இருக்கிறது. அவர் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 16ம் தேதி தன் பூர்வீக வீட்டுக்கு செல்வார். அப்பாவின் சிகிச்சைக்காக அந்த பூர்வீக வீட்டை விற்க தமன்னா முயற்சிக்கிறார், இந்த நிலையில் அப்பா செல்லும் நவம்பர் 16ந் தேதி அந்த வீட்டில் ஒரு பெண் கொலை செய்யப்பட்டு கிடக்கிறாள். கொலை செய்தது தமன்னாவின் அப்பாவா? வேறு யாராவதா? என்பதை தமன்னா கண்டுபிடிப்பதுதான் கதை.