ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

ரசிகர்களின் வரவேற்புடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பூவே உனக்காக. அருண், ராதிகா ப்ரீத்தி, ஸ்ரீனிஷ் அரவிந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட இந்த சீரியல் 250 எபிசோடுகளை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நாயகனாக அருண் நடித்து வந்தார். தற்போது சீரியலில் இருந்து விலகி விட்டதாக அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: பூவே உனக்காக தொடரிலிருந்து நான் விலகுகிறேன் என்பதை உங்கள் அனைவருக்கும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. இந்த வாய்ப்பைத் தந்த தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்த நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.
எனக்குத் தொடர்ந்து ஆதரவும் அன்பும் அளித்து வரும் எனது நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன் இதே தொடரில் நாயகியாக நடித்து வந்த நடிகர் லிவிங்ஸ்ட்டன் மகள் ஜோவிகா விலகினார். அவர் விலகலுக்கான காரணத்தை நேரம் வரும்போது வெளிப்படையாக சொல்வேன் என்ற லிவிங்ஸ்டன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.