ஜுலை 4ல் 6 படங்கள் ரிலீஸ் | 2025ன் 6 மாதங்களில் 122 படங்கள் ரிலீஸ் | விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் |
சரிகம நிறுவனம் தயாரித்து, ஒளிபரப்பி வரும் தொடர் ரோஜா. இந்த தொடரில் பிரியங்கா நல்லார், சிபு சூர்யன், ரங்கநாதன், வடிவுக்கரசி உள்பட பலர் நடித்து வருகிறார்கள், பிரின்ஸ் என்பவர் இயக்கி வருகிறார். 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் அனு என்கிற வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஷாமிலி சுகுமார் . தற்போது ரோஜா சீரியலில் இருந்து தான் விலகுவதாக அவர் அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவே கொரோனா தொற்றால் பெருமளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த மோசமான சூழலில் இருந்து தமிழகம் மீள வேண்டும். நான் 26 சீரியல்களில் நடித்து முடித்திருந்த நிலையில் வந்த வாய்ப்புதான் ரோஜா. இதில் நான் நடித்த அனு கேரக்டர் எனக்கு பெஸ்ட் வில்லி விருது வாங்கி தந்தது. ஆனால் இப்போது கர்ப்பமாக இருக்கிறேன். நடிப்பதற்கு என்னுடைய உடல் ஒத்துழைப்பதில்லை. ஆகையால் நான் இந்த கொரோனா நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்வதை தவிர்க்க வேண்டி இருக்கிறது. இந்த கொரோனா எனக்கு தெரிந்தவர்களை நிறையவே பாதித்துவிட்டது.
இந்த நேரத்தில் பாதுகாப்பு முக்கியமாக இருக்கிறது. இந்த நிலைமையால் தான் என்னால் நடிக்க முடியவில்லை. இந்த நிலைமை சரி ஆனால் கண்டிப்பாக நடிப்பேன். உண்மையில் நான் கொரோனாவால் பயந்து விட்டேன். அதனால் தான் இந்த முடிவை எடுக்க வேண்டி இருக்கிறது. மருத்துவர்களும் இந்த நேரத்தில் இப்படியான சூழ்நிலையில் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்துகின்றனர். எனவே ரசிகர்களாகிய நீங்களும் மாஸ்க் போடுங்கள் விழிப்புடன் இருங்கள். மற்றபடி என் கதாப்பாத்திரம் தொடரும் எனக்கு பதிலாக வேறு யாராவது நடிப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.