'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் 2004ம் ஆண்டு வெளிவந்த படம் '7 ஜி பிருந்தாவன் காலனி'. ஒரே சமயத்தில் தமிழிலும் தயாரிக்கப்பட்ட இப்படம் தமிழில் '7 ஜி ரெயின்போ காலனி' என்ற பெயரில் வெளியானது. இரண்டு மொழிகளிலும் பெரிய வெற்றியைப் பெற்றது.
நாளை மறுதினம் செப்டம்பர் 22ம் தேதி '7 ஜி பிருந்தாவன் காலனி' படத்தை மறு வெளியீடு செய்ய உள்ளனர். ஆந்திரா, தெலங்கானாவில் வெளியாகும் இப்படம் அமெரிக்காவிலும் மறு வெளியீடு செய்யப்படுகிறது. அதற்கான தியேட்டர்களைத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பொதுவாக மறு வெளியீட்டுப் படங்கள் இங்குதான் வெளியாகும். இப்போது அமெரிக்காவிலும் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள். இப்படத்தைத் தமிழிலும் மறு வெளியீடு செய்ய வேண்டும் என ரசிகர்கள் கேட்டுள்ளார்கள். கடந்த வருடங்களில் வெற்றிகரமாக ஓடிய படங்கள் இனி மறு வெளியீடாக அடிக்கடி வெளியிடப்படலாம்.