2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம், ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம் என பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா தற்போது மிஷ்கின் இயக்கி உள்ள பிசாசு 2 மற்றும், கா, மாளிகை, நோ என்ட்ரி உள்பட பல படங்களில் நடித்தது வருகிறார். சமீபகாலமாக இசை நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் கூடுதல் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா, வெளியூர்களில் உள்ள பிரசித்தி பெற்ற பல ஆலயங்களுக்கு சென்று தரிசனம் செய்வதையும் வாடிக்கையாக வைத்துள்ளார். சமீபத்தில் தான் இலங்கை சென்ற போது அங்குள்ள நல்லூர் கந்தசாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்ததாக தெரிவித்திருக்கும் ஆண்ட்ரியா, அது குறித்த புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.