பீச் மணலில் அஞ்சனாவின் போட்டோஷூட் | தமிழுக்கு வரும் கிரேஸ் ஆண்டனி | ஹன்சிகாவின் புதிய திரில்லர் படம் துவக்கம் | கருணாஸ் மகள் திருமணம் | கமலை சந்தித்த பிக்பாஸ் டைட்டிலை இழந்த விக்ரமன் | 'கேஜிஎப் 2' வசூலை முறியடித்து 2ம் இடம் பிடித்த 'பதான்' | ‛விடுதலை' பாடல் ; நன்றி சொன்ன சூரி - 'லவ் யு' சொன்ன தனுஷ் | ஸ்ரீதேவி பற்றிய புத்தகம் தயார் | இந்தியத் திரையுலகமாக ஆகிடுச்சி - தனுஷ் | படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும் - ‛வாத்தி' டிரைலர் வெளியீடு |
பிக் பாஸ் மூலம் பிரபலமாகி தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறவர் லாஸ்லியா. இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர். தற்போது இலங்கையில் நிலவி வரும் கடும் நெருக்கடி குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் எழுதியிருப்பதாவது:
இலங்கையர்களாகிய நாங்கள் மிக மோசமான போரை எதிர்கொண்டோம், அதில் எங்கள் குடும்பங்கள் உள்பட பலரும் அனைத்தையும் இழந்தோம். அதன் பிறகு சுனாமியை எதிர்கொண்டோம். 2019ஆம் ஆண்டு தேவாலயங்களில் குண்டுவெடிப்புகளை எதிர்கொண்டோம். அதன்பிறகு கொரோனா வைரஸ் பாதிப்புகளை எதிர்கொண்டோம். இப்போது பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்கிறோம் .
இவை எதுவுமே எங்களின் தவறல்ல, நாங்கள் இலங்கையர்கள் என்பதால் இவை அனைத்தையும் எதிர்கொள்கிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் இவை அனைத்தையும் எதிர்கொள்ளும் அளவுக்கு நாங்கள் பலமாக இருந்தோம். இப்போது இந்த பரிதாபமான சூழ்நிலையைச் சமாளிக்க ஒன்றாக இருப்போம், ஒருவருக்கொருவர் ஆதரவளிப்போம். என்று எழுதியிருக்கிறார்.