ரீ-ரிலீஸாகும் ‛தேவர் மகன்' பட பணிகள் : சிறுவன் பேசிய ‛கட்டபொம்மன்' வசனத்தால் அசந்து போன கமல் | பிரபாஸின் 'ஸ்பிரிட்' படப்பிடிப்பு மேலும் 4 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது! | இளையராஜாவின் காப்புரிமை வழக்கு : சோனி நிறுவனம் வருமானம் தாக்கல்... அடுத்து ‛டியூட்' படத்திற்கும் சிக்கல் | அக்டோபர் 31ம் தேதி 'காந்தாரா சாப்டர்-1' படத்தின் ஆங்கில பதிப்பு வெளியாகிறது! | டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! |
நடிகர் சிம்புவுக்கு அவரது பெற்றோர்களான டி.ராஜேந்தர் - உஷா தம்பதிகள் கடந்த சில ஆண்டுகளாக திருமணத்திற்கு பெண் பார்த்து வருகிறார்கள். சிம்புவின் திருமணம் குறித்து பல வதந்திகள் அவ்வப்போது வெளிவருவது வழக்கம். அந்த வகையில், நடிகர் சிம்புவுக்கு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் பெண்ணை (தமிழ் பெண்ணை) நிச்சயம் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சிம்பு தரப்பிலிருந்து தற்போது இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் மேனேஜர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ‛இலங்கை தமிழ் பெண் ஒருவரை நடிகர் சிம்பு திருமணம் செய்ய உள்ளதாக சில செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட செய்தியை நாங்கள் முழுமையாக மறுக்கிறோம். இதில் எந்தவிதமான உண்மையையும் இல்லை. திருமணம் போன்ற தனிப்பட்ட விஷயங்கள் குறித்து செய்தி வெளியிடும்போது தகவலை உறுதி செய்து அதன்பின் வெளியிட வேண்டிக் கொள்கிறோம். சிம்புவின் திருமணம் குறித்த தகவல் உறுதியானால் முதலில் நாங்கள் பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வோம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.