ஓங்கி குத்த வேண்டும் : விஜய் பேச்சால் நடிகர் ரஞ்சித் ஆவேசம் | ரூ. 300 கோடி வசூல் சாதனை படைத்த மகாவதார் நரசிம்மா | அறிவழகன் இயக்கத்தில் அதிதி ஷங்கர் | மிஷ்கின் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் | நடிகர்களுக்கு எதிராக செய்யப்படும் 'பெய்டு விமர்சனம்' : தமிழ் சினிமாவில் புதிய சர்ச்சை...! | போன வாரம் புடவையில், இந்த வாரம் பிகினியில்… | நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் ரைட் | பிணமாக நடித்துள்ள காளி வெங்கட் : அது பெரிய பாக்கியம் என்கிறார் | விஷால் வீட்டில் 4வது காதல் திருமணம் | ‛சின்ன பாப்பா பெரிய பாப்பா' புகழ் இயக்குனர் எஸ்என் சக்திவேல் காலமானார் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்த கேஜிஎப் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. குறிப்பாக, கேஜிஎப் -2 படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்தது. யஷ் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியிருக்கிறது. யஷ் அடுத்து நடிக்கும் 19வது படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இவர் தமிழில் என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, நளதமயந்தி, பொய் போன்ற படங்களில் நடித்தவர். அதோடு இதுவரை மூன்று படங்களை இயக்கி இருக்கிறார். அதில், நிவின் பாலி நடித்த மூத்தோன் என்ற மலையாள படம் கடந்த 2019ம் ஆண்டு வெளியானது. நான்கு ஆண்டுகள் கழித்து தற்போது அவர் யஷ் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.