மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக போகிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அவரது முதல் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்கிற தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. ஆனால் தனது சார்பில் தன்னுடைய ஸ்கிரிப்டுக்கு எந்தெந்த நடிகர்- நடிகைகள் பொருத்தமாக இருப்பார்கள் என்பது குறித்த ஒரு பட்டியலை லைகா நிறுவனத்திடம் கொடுத்துள்ளாராம் சஞ்சய். அதனால் அது குறித்த பரிசீலனை நடைபெற்று வருகிறது.
அதோடு இசையமைப்பாளர் விவகாரத்தில் தன்னைப் போலவே ஒரு புதுமுகத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ள சஞ்சய், ஏ. ஆர் .ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீனின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். ஆனால் இதற்கு லைகா நிறுவனம் உடன்படவில்லையாம். இயக்குனர் புதுமுகமாக இருப்பதால், இசையமைப்பாளர் ஒரு பிரபலமாக தான் இருக்க வேண்டும். அதுதான் வியாபாரத்துக்கு பலமாக இருக்கும் என்று சொல்லி லைகா நிறுவனத்தின் படங்களுக்கு தொடர்ந்து இசையமைத்து வரும் அனிருத்தையே இந்த படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு கூறியுள்ளார்களாம். இதன்மூலம் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்திற்கு இசையமைப்பது கிட்டத்தட்ட அனிருத் தான் என்கிறார்கள்.