''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
முன்பெல்லாம் நடிகர் சித்தார்த், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் . அந்த கட்சியினர் என்ன ஒரு கருத்து வெளியிட்டாலும் உடனடியாக தனது சார்பில் அதற்கு எதிர் கருத்து வெளியிடுவார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் சித்தார்த்துக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுவதை நிறுத்திவிட்டார் சித்தார்த்.
இப்படியான நிலையில், நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்கத்தான் விழிப்புணர்வு பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
இதை அடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்தியாவின் பெயர் பாரத் என மாற்ற இருப்பதாக கூறப்படுகிறதே என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டபோது, அதற்கு சித்தார்த், நாள் இப்போது இந்தியாவில் உள்ள சென்னையில் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் இதைப் பற்றி பேசுவோம். இங்கு வந்து, யார் என்ன பெயர் வைத்தார்கள் என்று பேசுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்று கோபமாக பதில் கொடுத்தார்.
கருத்து சொல்கிறோம் என எதையாவது உளறிவிட்டு பின்னர் அதுவே தனக்கு பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்பதால் சித்தார்த் இந்த கேள்வியை தவிர்த்து விட்டார் போலிருக்கிறது.