அருந்ததி படம் ஹிந்தியில் ரீமேக் ஆகுவது உறுதி! | வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பிரபாஸ் படத்தில் பிரபல வெளிநாட்டு ஆக்சன் ஹீரோ? | விக்ரம் 63வது படத்தின் புதிய அப்டேட்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த மிருணாள் தாகூர்! | பென்ஸ் படத்தில் லாரன்ஸூக்கு ஜோடி இல்லையா? | இளன் இயக்கி, நடிக்கவுள்ள கதாநாயகி யார் தெரியுமா? | ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி |

சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. சரித்திர கால கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள தனது கதாபாத்திரத்துக்காக அதிகளவில் மெனக்கெட்டு வருகிறார் சூர்யா. பத்துக்கும் மேற்பட்ட கெட்டப் என்பதால் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்ற உடல் கட்டை சீராக பராமரித்து வருகிறார். குறிப்பாக இந்த படத்தில் தனது கதாபாத்திரத்துக்காக ஒவ்வொரு நாளும் இரண்டரை மணி நேரம் மேக்கப் போட்டு நடித்து வருகிறார் சூர்யா. படத்தில் இடம்பெற்று வரும் போர்க்களக் கட்சிகளை இதுவரை இந்தியாவில் வெளியான சரித்திர கால படங்களின் சண்டை காட்சிகளை எல்லாம் மிஞ்சு வகையில் இந்த காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கி வருகிறார் சிவா. அதனால் கங்குவா படம் சூர்யா ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ரசிகர்களுக்குமே பிரமிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருக்கும் என்கிறார்கள். கங்குவா படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே கிராபிக்ஸ் பணிகளும் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டுக்கு இப்படத்தை வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.