Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இந்தியா - பாரத் கேள்வி : சித்தார்த் கோபம்

11 செப், 2023 - 12:45 IST
எழுத்தின் அளவு:
India---Bharat-question:-Siddharth-angry

முன்பெல்லாம் நடிகர் சித்தார்த், மத்தியில் ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார் . அந்த கட்சியினர் என்ன ஒரு கருத்து வெளியிட்டாலும் உடனடியாக தனது சார்பில் அதற்கு எதிர் கருத்து வெளியிடுவார். இதன் காரணமாக சோசியல் மீடியாவில் சித்தார்த்துக்கும், பாஜகவினருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வந்தது. ஆனால் சமீபகாலமாக சோசியல் மீடியாவில் கருத்து வெளியிடுவதை நிறுத்திவிட்டார் சித்தார்த்.

இப்படியான நிலையில், நேற்று உலக தற்கொலை தடுப்பு தினத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள பெசன்ட் நகரில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் வாக்கத்தான் ஓட்டம் நடைபெற்றது. இதில் நடிகர் சித்தார்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாக்கத்தான் விழிப்புணர்வு பயணத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டார்கள்.

இதை அடுத்து அவர் மீடியாக்களை சந்தித்தபோது, இந்தியாவின் பெயர் பாரத் என மாற்ற இருப்பதாக கூறப்படுகிறதே என்று அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்டபோது, அதற்கு சித்தார்த், நாள் இப்போது இந்தியாவில் உள்ள சென்னையில் வாக்கத்தான் விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம். அதனால் இதைப் பற்றி பேசுவோம். இங்கு வந்து, யார் என்ன பெயர் வைத்தார்கள் என்று பேசுவதெல்லாம் தேவை இல்லாத ஆணி. அதனால் எதற்காக வந்திருக்கிறோமோ அதைப் பற்றி மட்டும் கேளுங்கள் என்று கோபமாக பதில் கொடுத்தார்.

கருத்து சொல்கிறோம் என எதையாவது உளறிவிட்டு பின்னர் அதுவே தனக்கு பிரச்னையாக மாறிவிடக் கூடாது என்பதால் சித்தார்த் இந்த கேள்வியை தவிர்த்து விட்டார் போலிருக்கிறது.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
பிரமிப்பை ஏற்படுத்த போகும் கங்குவா போர்க்களக் காட்சிகள்பிரமிப்பை ஏற்படுத்த போகும் கங்குவா ... விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் : இசையமைப்பது யார்? விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படம் : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

M Ramachandran - Chennai,இந்தியா
14 செப், 2023 - 12:04 Report Abuse
M  Ramachandran சும்மா மூடிக்கிட்டு கட . வேறு மக்களுக்கா ஏற்காதவது முன்னின்று செய்திருக்கிறாயா அரசில் புகுந்தால் ஜால்றாதட்டுவது மட்டும் முக்கியமல்ல நேர்மையாளனாக இருந்து பிறகு வழிகாட்டுபவனாக இருக்கா வேண்டும் நீ எல்லாம் எதில் சேர்த்தி
Rate this:
Vaduvooraan - Chennai ,இந்தியா
13 செப், 2023 - 08:21 Report Abuse
Vaduvooraan அது என்னவென்றே தெரியவில்லை..ஒரு நாலு படம் நடித்துவிட்டால் நம்ம ஊர் தற்குறி நடிகர்களுக்கு தங்களுக்கு தெரியாத விஷயமே கிடையாது என்று ஒரு மிதப்பு வந்துவிடுகிறது. போதாக்குறைக்கு தமிழர்கள் வேறு பட்டப்பெயர்கலை வாரி வழங்குவதில் வள்ளல்களாக இருக்கிறார்கள். இந்த விவரம் இல்லாத நடிகர்களும் தங்களுக்கு இல்லாத தகுதிகள் அனைத்தும் வந்துவிட்டதாக ஒரு கற்பனையில் மிதக்க தொடங்கிவிடுகிறார்கள். வெவரம் இல்லாமல் உளறுகிற இவர்களை ஜனநாயகம் கருத்துச்சுதந்திரம் என்று பேசிக் கொண்டிருக்காமல் இவர்கள் படங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் அறிவார்ந்த சமுதாயம் என்றால் அதைத்தான் செய்யும்
Rate this:
sridharan - chennai,இந்தியா
12 செப், 2023 - 13:03 Report Abuse
sridharan cinema nadigan enbadhith thavira press meet alavukku ivarukku veru enna thagudhi ulladhu?.
Rate this:
Narasimhan - Manama,பஹ்ரைன்
12 செப், 2023 - 12:18 Report Abuse
Narasimhan தான் என்னவோ எல்லாம் தெரிந்த ஞானி என்று நினைத்துக்கொண்டுள்ளான் இந்த கூத்தாடி
Rate this:
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
12 செப், 2023 - 11:25 Report Abuse
Anbuselvan பதில் கூறாத மாதிரி பதில் கூறியதை கவனித்தீர்களா?
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in