அவதூறு பரப்பாதீங்க; ரஹ்மான் அற்புதமானவர் - சாய்ரா பானு ஆடியோ வெளியீடு | சூர்யா 44வது படத்தின் புரமோஷனை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ் | விவசாயிகளுக்கு விருந்து கொடுத்த நடிகர் விஜய்! | சொர்க்கவாசல் வெளியான பிறகு கைதி-2 கதையை மாற்றுவேன்! -லோகேஷ் கனகராஜ் | தைரியம் காட்டும் அரசியல்வாதி விஜய்: மடோனா சிறப்பு பேட்டி | வெல்லும் வரை காத்திரு: நடிகை குயின்சி ஸ்டான்லி | சிவராஜ் குமாரின் ‛பைரதி ரணங்கள்' நவ. 29ல் தமிழில் ரிலீஸ் | ‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! |
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான், 'மறக்குமா நெஞ்சம்' என்கிற பெயரில் இசை நிகழ்ச்சி நடத்தினார். கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி இந்த நிகழ்ச்சி சென்னையில் நடக்க இருந்த நிலையில் மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. பின்னர் செப்டம்பர் 10ம் தேதி நடைபெறும் என்றும் மாற்று தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸில் இந்த லைவ் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியோடு கண்டுகளித்திருக்க வேண்டிய இந்த நிகழ்ச்சி வெறுப்பும், வேதனையும், குமுறலுமாக ரசிகர்களை நோகடிக்க செய்து திருப்பி அனுப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கான மொத்த பொறுப்பையும் ஏசிடிசி என்கிற தனியார் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருந்தது. ஆனால் குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கைக்கு மேல் அதிக அளவில் டிக்கெட்டுகளை விநியோகம் செய்ததால் தாமதமாக வந்த நூற்றுக்கணக்கான நபர்களுக்கு உள்ளே நுழையவே இடமில்லை. 25000 ரூபாய் டிக்கெட் வாங்கியவர்களுக்கு கூட இதே நிலைதான் என்கிற போது 5000, 1000 ரூபாய் டிக்கெட்டுகளை வாங்கியவர்களின் நிலை பற்றி சொல்லவே தேவையில்லை.
நிகழ்ச்சி அங்கே நடந்து கொண்டிருக்கும்போது இடமில்லாமல் திரும்பியவர்கள் தங்கள் மனக்குமுறலை கொட்டித் தீர்த்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் நூற்றுக்கணக்கில் வெளியாகி உள்ளன. குறிப்பாக இருக்கை வசதி, முறையான பார்க்கிங் என எதையுமே நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நிர்வாகத்தினர் முறையாக செய்யவில்லை. உள்ளே சென்று இடமில்லாமல் திரும்பியவர்கள் கூட, தங்களது வாகனங்களை எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியேற முடியாமல் பல மணி நேரம் அவதிப்பட்டனர்.
இன்னும் பலருக்கு மெயின் ரோட்டில் இருந்து உள்ளே நுழையவே இடம் இல்லாத காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டதால் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை சென்று தங்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டு அங்கிருந்து நடந்தே இந்த நிகழ்ச்சியை பார்க்க வந்தனர். அப்படியும் அவர்களுக்கு அரங்கினுள் செல்ல இடமில்லாமல் வேதனையுடன் திரும்பிச்சென்ற காட்சிகளும் அரங்கேறின.
அந்த சமயத்தில் அந்த வழியாக பயணித்த தமிழக முதல்வரின் கான்வாய் கூட டிராபிக்கல் சிக்கி சாலையின் எதிர்புறத்தில் வழி ஏற்படுத்தி செல்லும் அளவிற்கு மிகப்பெரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடம் கிடைக்காமல் திரும்பி சென்றவர்களும் கூட்டத்தில் குழந்தைகளுடன் வந்து நெரிசலால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் திரும்பி சென்றவர்களும் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்தவர்களை கடுமையாக கண்டித்து திட்டித் தீர்த்துவிட்டு சென்றனர்.
பலர் 25000 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கியும் இப்படி ஏமாற்றி விட்டார்கள், இது ஒரு வகையான மோசடி தான்.. இதற்கு ஏ.ஆர் ரஹ்மான் தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியதையும் பார்க்க முடிந்தது. இதுவரை நடந்த இசை நிகழ்ச்சிகளிலேயே இதுதான் மிகவும் மோசமான இசை நிகழ்ச்சியாக இருக்கும் என்று ரசிகர்கள் எல்லோருமே தங்களது கருத்துக்களை ஒருமித்த குரலில் கூறிச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சியை காண மும்பையில் இருந்து வந்த ஒரு தம்பதியினர் தாங்கள் விமானத்தில் கிளம்பி சென்னை வந்து அங்கிருந்து காரில் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததாக கூறினா். உள்ளே நுழைய இடம் இல்லாததால் திரும்பிச் செல்வதாக வருத்தத்தை வெளிப்படுத்தினர். இப்படி இந்த நிகழ்ச்சியை பணம் செலுத்தியும் பார்க்க முடியாத பலரும் தங்கள் வருத்தத்தையும், கண்டனத்தையும் பதிவு செய்ததை பார்க்க முடிந்தது. இதற்கு இந்த நிகழ்ச்சியை பொறுப்பேற்று நடத்திய நிர்வாகமும், குறிப்பாக அவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்த ஏ.ஆர் ரஹ்மானும் நிச்சயம் பொறுப்பேற்க வேண்டும் என்றும் இது குறித்த வருத்தத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த நிகழ்ச்சியை பார்க்க இயலாத பார்வையாளர்களுக்கு அவர்களது பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
கடந்த முறை மழை காரணமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தபோது பாதுகாப்பு தான் முக்கியம் என கூறிய ஏ.ஆர் ரஹ்மான், இந்த நிகழ்ச்சி பாதுகாப்பற்ற முறையில் அமைந்ததற்கு என்ன விளக்கம் சொல்லப் போகிறார் என்பதுதான் பெரும்பாலான ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.