''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் 171வது படம் பற்றிய அறிவிப்பை அதன் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், அன்பறிவ் ஆக்ஷனில் இப்படம் உருவாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'ஜெயிலர்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் அவருடைய 170வது படமாக தசெ ஞானவேல் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். விரைவில் இப்படத்திற்கான படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. அதற்குள்ளாகவே 171வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். 170வது படத்தின் படப்பிடிப்பு முடிந்த பிறகுதான் 171வது படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
விஜய் நடிக்கும் 'லியோ' படத்திற்குப் பிறகு லோகேஷ் இயக்க உள்ள படம் இது. கமல்ஹாசன் நடிக்க 'விக்ரம்' படத்தை இயக்கிய பின் லோகேஷ் இயக்கத்தில், கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியானது. ஆனால், அது நடக்கவில்லை.
ரஜினிகாந்த் படத்தை முடித்த பிறகு லோகேஷ் மீண்டும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை இயக்கலாம். கார்த்தி நடிக்கும் 'கைதி 2', மற்றும் சூர்யா நடிக்கும் படம் என அவர் தொடர்ந்து படங்களை இயக்க பேசி முடித்துள்ளதாகச் சொல்கிறார்கள்.