ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
விஜய் சேதுபதி நடிக்கும் 50வது படம் 'மஹாராஜா'. இதனை 'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இயக்குகிறார். நட்டி (எ) நட்ராஜ் சுப்ரமணியம், முனீஷ்காந்த், அருள்தாஸ், பாய்ஸ் மணிகண்டன் மற்றும் பலர் நடிக்கின்றனர். பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் சுந்தரம் மற்றும் தி ரூட் ஜெகதீஷ் பழனிசாமி இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. திரைப்பட பத்திரிகையாளர்கள் இணைந்து பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டனர்.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி சலூன் கடை நாற்காலியில் கையில் அரிவாளுடன் உட்கார்ந்திருப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. அவருக்கு பின்னால் காவலர்கள் நின்று கொண்டு அவரை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் படத்தில் விஜய்சேதுபதி சவரத் தொழிலாளியாக நடிக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.